வீர தீரன் சூரன் ரிலீஸ் தாமதம்…. சட்டத் தடை..இக்கு காரணம் என்ன?
நடிகர் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் உருவான வீர தீரன் சூரன் படத்தை அருண்குமார் இயக்கி இருக்கிறார் .
சியான் விக்ரமின் வீர தீர சூரன் நேற்று மார்ச் 27 அன்று மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரனின் L2: எம்புரான் உடன் மோதவிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வீர தீர சூரன் சட்டத் தடையை எதிர்கொண்டதால், அதன் அமெரிக்க பிரீமியர் மற்றும் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இப்படம் வியாழன் அன்று வெளியாகும் என்று அறிவிக்கபிடிருகிறது, படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடத்து வந்த நிலையில் இப்படத்திற்கு திடீரென்று கோர்ட் தடை விதித்ததால் திட்டமிட்டபடி படம் வெளியாக வில்லை தமிழ்நாட்டில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது .
படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்கு முன்பே படத்தின் ஓவர்-தி-டாப் உரிமைகளை விற்கும் ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி படத்தின் தயாரிப்பாளரான ரியா ஷிபு மீது B4U வழக்கு தொடர்ந்துள்ளது, காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டன, ஏனெனில் டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை காலை 10:30 மணி வரை படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதித்ததாக கூறப்படுகிறது. Delhi High Court ரூபாய் 7 கோடியை கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் 48 மணி நேரத்தில் படத்தின் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் Court….இல் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார் ,நேற்று பிற்பகல் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதையடுத்து கோர்ட் தடை நீங்கி வீர தீரன் சூரன் படம் நேற்று மாலை தமிழகம் முழுவதும் வெளியானது.