வில்லியனூர் ஸ்ரீ தென்கலை வரதராஜ பெருமாள் ஆலயத்தின் தங்கத்தேரின் மரத்தேரின் வெள்ளோட்டம் வைபவம் முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பெருந்தேவித்தாயார் சமேத தென்கலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின் தங்கத்தேரின் மரத்தேர் வெள்ளோட்டம் வைபவமானது ஆலயத்தில் நடைபெற்றது.
இந்த புதிய தங்கத்தேர் ஸ்வர்ணரதம் மரத்தேர் வெள்ளோட்டம் விடுவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் முன்னிலையில் புதிய தங்கத்தேரின் ஸ்வர்ணரதம் மரத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.