Copyrights கொடுத்து சோசியல் மீடியாவை அலறவைத்த வெங்கட் பிரபு
நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தில் சின்ன சின்ன கண்கள் என்ற மெலடி பாடல் வெளியானது.
பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் பலர் சிக்கலில் சிக்கி தவிக்கிறார்கள். விஜய் நடிக்கும் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது.
விசில் போடு என்ற பாடல் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் ரீச் ஆகாத நிலையில் யுவன் சங்கர் ராஜா AI டெக்னாலஜி மூலம் இறந்த தனது அக்கா பவதாரையின் குரலில் சின்ன சின்ன கண்கள் என்ற பாடலை COMPOSE செய்திருக்கிறார்.
ஆனால் இந்த பாடல் வெளியாவதற்கு முன்பே சமூக வலைத்தளத்தில் இந்த பாடலும் சம்பந்தபட்ட புகைப்படங்கலும் வெளியானது இதனை பார்த்து அதிர்ந்த வெங்கட் பிரபு போட்ட ஆர்டர் என்னனா… சின்ன சின்ன கண்கள் Lyrics புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட அனைத்து சோசியல் மீடியாக்களுக்கு காப்பிரைட்ஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பாடல் வெளியானால் ரீச் குறைத்து விடும் என்று வெங்கட் பிரபு இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
ஏற்கனவே விசில் போடு என்ற பாடலை வைரமுத்துவின் மகன் தான் எழுதினாரா என்று கேட்டு நெகடிவ் கமெண்ட்ஸ்கள் வெளியான நிலையில் தேவையற்ற விமர்சனங்களை தடுப்பதற்காக வெங்கட் பிரபு சோசியல் மீடியாவை சூரையாடி இருக்கிறார்.