in

திருச்சி மறுவாழ்வு முகாமில் தண்ணீருக்கு பணம் கொடுக்க மிரட்டி வரும் நபரின் வீடியோ வெளியீடு

திருச்சி மறுவாழ்வு முகாமில் தண்ணீருக்கு பணம் கொடுக்க மிரட்டி வரும் நபரின் வீடியோ வெளியீடு

திருச்சி வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு முகாமில் 400க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி செய்து கொடுத்துள்ளது. அவர்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீருக்கு முகாமில் உள்ள நபர் வேண்டுமென்றே அங்குள்ள பெண்களை மிரட்டி தண்ணீருக்கு பணத்தை வசூலித்து வருகிறார்.

ஒரு வீட்டுக்கு 50 ரூபாய் மாதம் கொடுக்க வேண்டுமென தொடர்ந்து அச்சுறுத்தி மிரட்டி வருவதால் என்ன செய்வது என்று அங்கு வசிப்பவர்கள் தெரியாமல் தண்ணீருக்கு பணம் கேட்டு வரும் பொழுது கைபேசியில் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். தண்ணீருக்கு மாதம் 50 ரூபாய் கொடுத்தால் தான் உங்களுக்கு தண்ணீர் வரும் என அவர் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று மிரட்டி வருவதாக அங்கு உள்ள பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போலியாக முத்திரைகளை தயார் செய்து தண்ணீருக்கு பணம் வசூலிக்கும் இந்த போலி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

What do you think?

சேவை மைய டேபிளில் போன் இல்லாததால் கல்லூரி துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்களுக்கு சேவை மையம்

நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலக்கிறது என புகார்