ஷங்கர் ரேஞ்சுக்கு பீட்டர் விடும் விக்னேஷ் சிவன்……….
அஜித்தை வைத்து படம் இயக்கம் நினைத்த விக்னேஷ் சிவனிடம் எதிர்பார்த்த அளவிற்கு சரக்கு இல்லை என்று அஜித் மகிழ் திருமேனிக்கு தன்னை இயக்கம் வாய்ப்பை கொடுத்தார்.
விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு பிரதீப் ரங்க நாதனை வைத்து காதல் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்குகிறார்.
கீர்த்தி ஷெட்டி பிரதீப்க்கு ஜோடியாகவும் நீண்ட நாட்களுக்கு பிறகு சீமான் முக்கிய வே டத்தில் நடிக்கிறார்.
இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இப்படத்தின் சூட்டிங் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வெயிட்டிங் காரணம் இப்படத்தின் பட்ஜெட் அதிகமாக எகிறி விட்டதாம் தயாரிப்பாளர் இதற்கு மேல் தன்னால் பணம் கொடுக்க இயலாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.
ஆனால் விக்னேஷ் சிவன் இந்த படத்திற்கு அந்த பாடல் ரொம்ப முக்கியம் என்று அடம் பிடித்து பாடலுக்கு ஐந்து கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்.
சங்கர் ரேஞ்சுக்கு இவர் கொடுத்த பில்டப்பை பார்த்த தயாரிப்பாளர் அவ்ளோ பட்ஜெட் என்னால் ஒதுக்க முடியாது சிம்பிளாக பாட்டை எடுத்து முடித்து விடுங்கள் என்று கூறி இருக்கிறாராம்.