in

Bedroom …ல சரக்கு பாட்டில்…லா…சர்ச்சைக்கு விளக்கம் அளித்த விஜய் ஆண்டனி

Bedroom …ல சரக்கு பாட்டில்…லா…சர்ச்சைக்கு விளக்கம் அளித்த விஜய் ஆண்டனி

 

ரோமியோ என்ற படத்தை விஜய் ஆண்டனி தானே தயாரித்து ஹீரோவாக நடித்துள்ளார்.

விநாயக் வைத்தியநாதன் ரோமியோ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், இவர்களுடன் மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ் உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. முதல் இரவு காட்சியில் நாயகி மது பாட்டிலுடனும் விஜய் ஆண்டனி கையில் பால் செம்புடனும் இருப்பது போன்ற காட்சியிடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளம்பி உள்ளது.

தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்று போராடும் இந்த நேரத்தில் முதலிரவில் பெண் கையில் மது பாட்டில் வைத்திருப்பது போல் காட்சி வைக்கபட்டுள்ளது சரியா என்ற கேள்விகள் சமூக வலைத்தளத்தில் எழுப்பப்பட்டுள்ள நிலையில் இதற்கு விளக்கம் அளித்து விஜய் அந்தோனி கூறியதாவது …

மது குடிப்பதில் ஆண்கள் பெண்கள் இருவரும் வித்தியாசம் பார்க்க கூடாது. குடி எல்லோருக்கும் ஒன்றுதான். ஆண்களுக்கு உள்ள எல்லா பழக்கங்களும் பெண்களுக்கும் இருக்கிறது.

அந்த மாதிரி தான் மது அருந்துவதும். நான் மதுவை ஆதரிக்கவில்லை ஆண் குடிப்பது தவறு என்றால் பெண் குடிப்பதும் தவறு என்ற கருத்தை தான் இந்த படத்தில் கூறவருகிறோம்.

நான் முதல் தடவையாக காதல் படத்தில் நடிக்கிறேன். ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள், ஆண் சமூகம் எப்படி இதை பொறுத்துக் கொள்கிறது. அதனால் ஆண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் என்ன என்பதை தான் இந்த படத்தில் கூறியுள்ளோம்.

மேலும் இப்படம் குறித்து தலைவாசல் விஜய், கூறியதாவது “ரோமியோ படம் விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் பெரிய மாற்றத்தை கொடுக்கும். அந்த அளவுக்கு நல்லவர். பெரிய துன்பத்தை தனது மனவலிமையால் கடந்து வந்து மீண்டும் வேலையை செய்து வருகிறார் விஜய் ஆண்டனி. அவர் மனநிலையை நான் மதிக்கிறேன்.’’ என்றார்.

What do you think?

நடிகை சமந்தவை எச்சரித்து…. மருத்துவர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

மும்பையில் வீடு வாங்கினது வீணாக வில்லை. ஜோதிகா