in

நோன்புக்கு வருவது போலவா விஜய் வந்தார்…. புனிதத்தை கெடுத்துவிட்டார்

நோன்புக்கு வருவது போலவா விஜய் வந்தார்…. புனிதத்தை கெடுத்துவிட்டார்

 

சென்னையில் வெள்ளிக்கிழமை இப்தார் விருந்தை நடத்திய தமிழக வெற்றிக் கழக நிறுவனர் தலைவர் விஜய், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தின் கொள்கைகளைப் பாராட்டி முஸ்லிம்களை வாழ்த்தினார்.

தொப்பி அணிந்து, வெள்ளைச் சட்டை மற்றும் வேட்டி அணிந்த விஜய், தனது அழைப்பை ஏற்று நிகழ்வில் பங்கேற்ற முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரை திமுகவினரும் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் ..னும் கடுமையாக விமர்சித்தனர்.

விஜய் நடித்த துப்பாக்கி , பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து காட்டிய படத்தில் நடித்தவர் அரசியல் என்று வந்தவுடன் முஸ்லிம் தமது நண்பர்கள் போல இப்தார் நோன்பில் கலந்து கொள்ள வந்தது ஏன்? என்று திமுகவினர் கேள்வி எழுப்பினர்.

எத்தனையோ தலைவர்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வந்திருகிறனர் ஆனால் விஜய் வந்தது போல் யாரும் வந்ததில்லை. விஜய் நோன்புக்கு வரும் போது தேர்தல் பரப்புரைக்கு வருவது போல கையை அசைத்துக் கொண்டு வந்தார், அது மட்டும் இன்றி தலைவா என்று மற்றவர்கள் கத்தி கொண்டு மசூதிக்குள் நுழைந்துவிட்டனர் சிலர் குடித்துவிட்டு வந்ததாகவும் தெரிகிறது.

காலை முதல் மாலை வரை எச்சில் கூட விழுங்காமல் இருக்கும் இஸ்லாமியர்கள் இருக்கும் அந்த புனிதமான இடத்தை மாசுபடுத்தி விட்டனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்தணன் விமர்சித்துள்ளார்.

What do you think?

சூர்யா…வின் படத்தை மட்டும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்… ஜோதிகா ஆவேசம்

சொத்து முடக்கம் இடைக்காலத் தடை விதித்த கோர்ட்