in

விடாமுயற்சி..யில் இணைந்துள்ள விஜய் டிவி பிரபலம்

விடாமுயற்சி..யில் இணைந்துள்ள விஜய் டிவி பிரபலம்

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இணைந்து உருவாக்கிய விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், லைகா புரொடக்ஷன்ஸ் மற்றொரு நடிகையின் பெயரை அறிவித்துள்ளது.

ஏற்கனவே த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா போன்றவர்கள் நடித்துள்ள நிலையில் புதிதாக ரம்யா சுப்ரமணியன் இணைந்துள்ளார்.

விஜே ரம்யா அஜித் நடித்த மங்காத்தா படத்தில் நிருபராக நடித்தார். அஜித்து மாப்பிள்ளை போல வேட்டி சட்டையில் ஜொலிக்க ரம்யா பட்டு சேலையில் இருக்கும் புகை படத்தை ரம்யா வெளியிட…ரசிகர்களிடையே படு வேகமாக வைரலாகி வருகிறது.

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளது. பொங்கல் race..இல் விடாமுயற்சி நிற்பதால் இறுதி கட்ட படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கும் படக்குழு போஸ்ட் Promotion பணியிலும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

What do you think?

தளபதி 69 ஷூட் ஸ்டில்

சூப்பர் ஸ்டார்…ரா யாரு அவரு?