in

‘Say No To Temporary Pleasure, Say No To Drugs’ என்று சொல்லி மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்த விஜய்


Watch – YouTube Click

‘Say No To Temporary Pleasure, Say No To Drugs’ என்று சொல்லி மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்த விஜய்

 

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 21 மாவட்டங்களை சேர்ந்த பத்தாம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து ஊக்க படுத்த இன்று காலை 10 மணிக்கு அரங்கத்திற்குள் கெத்தாக என்ட்ரி கொடுத்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் கட்சியை ஆரம்பித்தவர் மாணவர்கள் சந்திப்பை ஒரு அரசியலுக்கு ஓர் Platform…ஆக பயன்படுத்தியிருக்கிறார். மற்ற கட்சிகளுடன் போட்டி போட்டு அரசியலில் தாக்குப்பிடிப்பரா என்று தெரியவில்லை.

வெற்றி பெற்ற மாணவர்களை சந்தித்து வைரம் மோதிரம் மற்றும் கம்மலையும் பரிசாக வழங்கினார்.

அவர்களுடன் உரையாடிய விஜய் உங்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்யுங்கள் அந்த துறையில் என்ன ஆய்வு செய்ய முடியும் என்பதை கண்டுபிடியுங்கள்.

வருங்கால இந்தியா மாணவர்களின் கையில் இருக்கிறது என்று வாய் வார்த்தைக்கு சொல்லப்படவில்லை மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து ஒரு வளமான இந்தியாவை உருவாக்க வேண்டும் அதே மாதிரி மாணவர்கள் அரசியலிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.

நன்றாக படித்து அரசியளுக்கு வந்து நல்ல தலைவராக பிரகாசிக்க வேண்டும் என்றார். எதிர்காலத்தில் அரசியலிலும் பணிபுரிய ஒரு career தேர்வு ஏன் வரக்கூடாது அதுவும் வர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் மாணவர்கள் படிக்கும்போது அரசியலிலும் பங்கேற்கலாம்.

மேலும் வலைதளங்களில் நல்லது கெட்டது என்று பல செய்திகள் வருகிறது எது உண்மை என்று ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள். நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள் தவறான நட்பு வட்டாரத்திற்குள் நுழையாதீர்கள் என்று அட்வைஸ் செய்தார்.

அரசாங்கம் நம்மளுக்கு செய்வதை விட சுய பாதுகாப்பும் கட்டுப்பாடும் ரொம்ப அவசியம் ‘Say No To Temporary Pleasure, Say No To Drugs’ என்று சொல்லி மாணவர்களை உறுதிமொழி எடுக்க செய்தார்.

தோல்வியை கண்டு துவளாதீர்கள் வெற்றி தோல்வி வாழ்வில் சகஜம் . வெற்றி நிரந்தரம் அல்ல, தோல்வி என்பது தொடர்கதையும்’ அல்ல என்று கூறி தனது உரையை முடித்தார் விஜய்.

அரங்கத்திற்குள் நுழைந்ததில் இருந்து முடியும் வரை பொறுமையும் புன்சரிப்பையும் விடாமல் இந்த நிகழ்ச்சியை நடத்தினார். விஜய் அட்வைஸ் மட்டும் கொடுக்க விலை இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அருமையான ஒரு விருந்தையும் ஏற்பாடு செய்திருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

பாமக மத்திய அரசிடம் பேசி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மதுரையில் கி வீரமணி பேட்டி

பந்தா இல்லாத எளிமையான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான்