ரசிகர் மன்ற மாவட்ட தலைவர், துணைச் செயலாளரின் திருமண விழா – விஜய் சேதுபதி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரைச் சேர்ந்த ஜெயபாஸ், விஜய் சேதுபதி ரசிகர் மற்றும் நற்பணி மன்றத்தின் நாகை மாவட்ட தலைவராகவும், அவரது தம்பி ஜெயபால், விஜய் சேதுபதி ரசிகர் மற்றும் நற்பணி மன்றத்தின் நாகை மாவட்ட துணைச் செயலாளராகவும் உள்ளனர்.,
இந்த இரு சகோதரர்களின் திருமண விழா வரும் 2ஆம் தேதி உசிலம்பட்டியில் நடைபெற உள்ள சூழலில் இன்று இந்த மணமக்களை நேரில் சந்திக்க வந்த நடிகர் விஜய் சேதுபதி., இரு மணமக்களையும் ஆசிர்வதித்தார்.,
தொடர்ந்து மணமக்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பின் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக கிளம்பி சென்றார்.,