Silent…டாக படத்தை முடித்த விஜய் சேதுபதி
கடைசியாக 2022 ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கிய பாண்டிராஜ், பசங்க, மெரினா மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களை இயக்கியவர்..
பெரிய நடிகர்களின் பேனர் படம் என்றால் டைட்டில் டீசர் அப்டேட் என்று அதகலப்படும் ஆனால் நடிகர் விஜய் சேதுபதி சைலன்டாக ஒரு படத்தையே நடித்து முடித்து விட்டார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில், ‘VJS 52’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்தப் படத்தின் படபிடிப்பு, திருச்சிராப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது.
பாண்டியராஜ் இயக்கும் இப்படத்தின் நிறைவு நாளை கேக் வெட்டி படக் குழுவினர் கொண்டாடினர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பை இன்னும் அறிவிக்கவில்லை, டைட்டில் டீசல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று விரைவில் Update வெளிவரும் என்று பட குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.
பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் நித்யா மேனன், செம்பியன் வினோத், ஆர்.கே. சுரேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
குடும்ப பொழுதுபோக்கு படங்களை வழங்குவதில் பாண்டிராஜ் வல்லவர் என்பதால், இந்தத் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.