பந்தா இல்லாத எளிமையான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான்
பந்தா இல்லாத எளிமையான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிகாமல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி எடுப்பவர்.
ஹீரோவாக நடிக்கும் போதே வில்லனாகவும் நடித்த முதல் நடிகர்.
கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நன்கு கற்று தெரிந்தவர்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியானது மகாராஜா என்ற படம் ரசிகர் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்த நிலையில் தன்னை பற்றிய விமர்சனத்திற்கு பேட்டி முலம் பதில் அடி கொடுத்திருக்கிறார்.
என்ன சொன்னாருனா… இனி கேமீயோ ரோலில் நடிக்க வேண்டாம் என்று நான் முடிவு எடுத்து இருக்கிறேன் அப்படி நான் நடிப்பதால் அதன் அருமை பலருக்கு புரிவதில்லை பணத்திற்காக நடிக்கிறேன் என்று கூறுகிறார்கள்.
நடிக்கும் போது நம்மை எப்படி நடத்த வேண்டும் என்றும் தெரியவில்லை ஒரு சிலர் அசால்டாக இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள் என்னால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டால் உடனே எமோஷனல் பிளாக்மெயில் செய்கிறார்கள்.
என்னால் சொந்த வாழ்க்கைக்கே நேரம் ஒதுக்க முடியவில்லை என்னால் நடிக்க முடியாது என்று கூறினால் கதையை கேட்டு விட்டு சொல்லுங்கள் என்று மல்லுக்கு நிற்கிறார்கள்.
மற்ற நடிகர்கள் கேமீயோ…ரோலில் நடிக்க ஒற்றுக்கொள்வதில்லை அதனால் தான் என்னிடம் வருகிறார்கள். நான் முடியாது என்று சொன்னால் உடனே கோபித்துக் கொள்கிறார்கள் நடிக்க முடியாது என்று காராறாக சொல்லும் மற்ற நடிகர்களிடம் இவர்கள் எந்த கோபத்தையும் காட்டுவதில்லை என்று வருத்தத்துடன் விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார்.