in

திடிரென்று அமெரிக்கா சென்று … நெப்போலியனை சந்தித்த விஜய் டிவி மாக்காப்பா

திடிரென்று அமெரிக்கா சென்று … நெப்போலியனை சந்தித்த விஜய் டிவி மாக்காப்பா

அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன் மகனை பார்ப்பதற்காக விஜய் டிவி பிரபலங்கள் இருவர் சென்று இருக்கின்றனர்.

எட்டுப்பட்டி ராசா என்ற பாடல் மூலம் எட்டு திக்கிலும் பிரபலமானவர் நெப்போலியன். இவர் ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர் பிறகு ஒரு சில படங்களின் ஹீரோவாக நடித்த படம் வெற்றி பெற்றது.

நடிப்புக்கு முழுக்கு போட்ட இவர் அரசியலில் களம் இறங்கினார். திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர் தன் மகனின் உடல் நலக்குறைவு காரணமாக அரசியலை விட்டு விலகி நிரந்தரமாக அமெரிக்காவில் செட்டிலானார்.

அங்கு சொந்தமாக ஒரு கம்பெனி நடத்தி வருகிறார். நெப்போலியனுக்கு இரண்டு மகன் உண்டு இவரின் இரண்டாவது மகன் தசை அயற்சி நோயால் பாதிக்கப்பட்டவர். 10 வயது ஆன பிறகு இவரால் முழுமையாக நடக்க முடியாது என்று நான்கு வயது இருக்கும்போதே மருத்துவர்கள் கூறியதால் திருநெல்வேலியில் உள்ள வைத்தியசாலைக்கு மகனை குணப்படுத்த சென்ற போது இவரை போலவே அங்கிருந்த பல குழந்தைகள் பாதிக்க பட்டிருப்பதை பார்த்து வேதனைப்பட்டவர்.

அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கு ஒரு மருத்துவமனையை கட்டியுள்ளார். இந்நிலையில் விஜய் டிவி மாக்காப்பா மற்றும் டிஜே பிளாக் இருவரும் அமெரிக்கா சென்று நெப்போலியன் குடும்பத்தை சந்தித்து இருக்கின்றனர்.

அவர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை அவருடைய மகன் தனுஷ் இன்ஸ்டாவில் பதிவிட்டு நான் இப்பொழுதுதான் முதன்முறையாக மாகாபாவையும் டிஜே பிளாக்கையும் சந்திக்கிறேன். இவர்கள் என்னை சந்திக்க வந்தது மிகவும் மகிழ்ச்சி என்று இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கிறார்.

What do you think?

விஜே சித்துவை…. கைதி செய்யாமல்… TTF..வாசனை… மட்டும் கைதி செய்வது நாயமா?

இள நடிகருடன் நயன் ஜோடியா?