வசமா சிக்கிய சீமான்…சீமானு..க்கு ஆப்பு வைத்த விஜயலட்சுமி வழக்கு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது ஆனால் 2012 ஆம் ஆண்டு அந்தப் புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றார்.
சீமானும் தன் மீது உள்ள வழக்கை தள்ளுபடி செய்யும் படி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ் வழக்கை விசாரித்த நீதிபதி 2008 ஆம் ஆண்டு கோவிலில் மாலை மாற்றிக்கொண்டு பலமுறை தன்னிடம் தொடர்பு வைத்துக் கொண்ட சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி விஜயலட்சுமி வழக்கை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரணை செய்ய காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.
அதனால் சீமான் மனுவை தள்ளுபடி செய்கிறேன் 12 வாரங்களுக்குள் இந்த விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.