திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திரையரங்குகளில் இன்று விஜய் நடித்துள்ள தி- கோட் படம் திரையிடப்பட்டது
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாக உருவாகியுள்ளது தி கோட். பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், வைபவ், ஜெயராம், பிரேம்ஜி, மினாக்ஷி செளதரி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய தி கோட் இன்று உலகளவில் 5000 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தின் சிறப்புக் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் மிக பிரம்மாண்டமாக உள்ளது விறுவிறுப்புக்கு சிறிதளவு கூட பஞ்சமில்லை என தெரிவித்து வருகிறார்கள்.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திரையரங்குகளில் இன்று விஜய் நடித்துள்ள தி- கோட் படம் காலை 9 மணி அளவில் திரையிடப்பட்டது.
நடிகர் விஜய் ரசிகர்கள் அதிகாலை முதலிலேயே திரையரங்கம் முன்பு அதிக அளவில் ரசிகர்கள் குவிந்தனர்.
நடிகர் விஜய் படம் திரையிடப்பட்டாலே தமிழ்நாடு மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் எப்போது விஜய் படம் திரையிடபட்டாலும், ரசிகர்கள் அனைத்து திரையரங்குகள் முன்பு பட்டாசு வெடிப்பது, நடனம் ஆடுவது, இனிப்புகள் வழங்குவது, பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடிகர் விஜய் அவர்களுக்கு பேனர் வைப்பது, பால் அபிஷேகம் பண்ணுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள்.
திருச்சியில் நடிகர் விஜய் படம் வெளியிடப்பட்டாலே திருவிழா போன்று திரையரங்குகள் காட்சி அளிக்கும்.
ஆனால் இன்று நடிகர் விஜய் அவர்களின் படம் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.
ஆனால் எந்த ஆரவாரமும் அளப்பரியும் இல்லாமல் விஜய் ரசிகர்கள் அமைதியான முறையில் திரையரங்குக்குள் சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.