மீண்டும் வெளியாகும் விஜய்..யின் வில்லு
போட்ட காசை எடுக்கலனாலும் பரவாயில்லை ஒரு வாரமாவது படம் ஓடாதா என்று ஏங்கும் நிலையில் தான் தற்பொழுது திரையரங்கு உரிமையாளர்கள் இருக்கின்றனர்.
பெரிய ஹீரோக்களின் படங்கள் கூட ஓடாமல் தியேட்டர்கள் ஈ அடிக்கிறது. அதனால் தற்பொழுது முன்னணி நடிகர்களின் ஹிட்டான படங்களை டிஜிட்டலைஸ் ஆக்கி திரும்பவும் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்கின்றனர்.
அப்படி சமீபத்தில் வெளியான கில்லி படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
விஜய்க்கு போட்டியாக அஜித் நடித்த தீனா, பில்லா போன்ற படங்களும் ரிலீஸ் செய்யப்பட்டன.
தற்பொழுது பிரபுதேவா இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான வில்லு படத்தை மீண்டும் ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர்.