in

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக நடக்காது அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் மதுரையில் பேட்டி


Watch – YouTube Click

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக நடக்காது அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் மதுரையில் பேட்டி

 

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காலை மதுரை வந்த அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களை சந்தித்த கூறியதாவது

ஈரோடு கிழக்கில் நடந்ததுதான் விக்கிரபாண்டி இடைத்தேர்தலில் நடக்கும் என்றும் திமுக தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தும் என்பதால் தான் அதிமுக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலின் போது, 36 இடங்களில் மக்களை பட்டியில் அடைத்து வைத்தனர்.

அங்கு, ஜனநாயக படுகொலை நடைபெற்றது. மாநில அரசுக்கு, தேர்தல் ஆணையம், போலீஸ், அரசு அதிகாரிகள் துணை நிற்கின்றனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக நடக்காது என கருதியதால் தான் , அங்கு அதிமுக போட்டியிடவில்லை.

அங்கு பணத்தை வாரி இறைப்பார்கள். பரிசு பொருட்கள் அள்ளி கொடுப்பார்கள். அமைச்சர்கள் பூத் வாரியாக பிரித்து பண மழை பொழியும். சுதந்திரமாக தேர்தல் நடக்காது. லோக்சபா தேர்தலில், விக்கிரவாண்டியில் அதிமுக 6 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக பெற்றது.

லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் வேறு வேறு. மக்கள் இரண்டையும் பிரித்து பார்த்து சிந்தித்து ஓட்டுப் போடுவார்கள். 2014 ல் 9 தொகுதிகளில் 3ம் இடம் பிடித்தது. 2 தொகுதிகளில் திமுக டெபாசிட் இழந்தது.வெற்றி தோல்வி மாறி மாறி வரும். 2026ல் அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

டெரகோட்டா பொம்மைகள் செய்து அசத்திய புதுச்சேரி வருகை புரிந்த மாணவ மாணவிகள்

ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா