in

நாகையில் பட்டா மாறுதலுக்காக 10,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது


Watch – YouTube Click

நாகையில் பட்டா மாறுதலுக்காக 10,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா அகர கடம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது நிலத்திற்கான பட்டா மாறுதல் செய்வதற்காக அகர கடம்பனூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வியை கணேசன் சந்தித்துள்ளார். அப்போது பட்டா மாறுதலுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் செல்வி தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கணேசன் நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணேசனிடம் ரசாயனம் தடவிய பணம் பத்தாயிரம் ரூபாயை வழங்கி கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்குமாறு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இன்று அகர கடம்பனூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்த கணேசன் ரசாயனம் தடவிய பணத்தை விஏஓ செல்வியிடம் வழங்கியுள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அதிரடியாக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். தொடர்ந்து அலுவலகத்தின் வாயில் கதவு உள்ளிட்ட அனைத்து கதவுகளையும், ஜன்னல் கதவுகளையும் உள்புறமாக பூட்டி தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலகத்தில் இருந்த விஏஓ கைது செய்தனர் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது

மேலும் அதே கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த காக்கழனி கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், வடகரை கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ், அகரகடம்பனூர் கிராம உதவியாளர் ஜெயபால் ஆகியோரையும் லஞ்ச ஒழிப்புதுறையினர் விசாரணை செய்து அனைவரையும் விடுவித்தனர்


Watch – YouTube Click

What do you think?

கர்நாடகாவிடம் இருந்து நீதிமன்றம் மூலம் உரிய இழப்பீடு பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

எஸ் பி-க்கு மிரட்டல் – பிடிபட்ட மூன்று சிறார்களின் பெற்றோர்களுக்கு அட்வைஸ் செய்த எஸ்.பி