in

அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார்


Watch – YouTube Click

அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார்

 

திருவக்கரை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு

பகுஜன் சமாஜ் கட்சியின் விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் தலைமையில் திருவக்கரை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.

எங்கள் ஊராட்சியில் தெருமின் விளக்கு வசதி, குடிநீர் வசதி, வடிகால் வாய்க்கால் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதுபற்றி ஊராட்சி தலைவர் மோகனா ராமச்சந்திரனிடம் சென்று சென்று கேட்டபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மாறாக அவர், நான் தலைவர்தான், ஆனால் என்னை உருவாக்கியவர், ஊராட்சி தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தவர் எல்லாம் இதற்கு முன்பு தொடர்ந்து ஊராட்சி தலைவராக இருந்த பாஸ்கர் தான்.

ஆகவே அவர் சொன்னால்தான் என்னால் எதையுமே செய்ய முடியும் என்றும், தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்கிறார். அவரிடம் சென்று கிராம சபை கூட்டத்தை எங்கள் ஆதிதிராவிடர் பகுதியில் நடத்துமாறு கேட்டால் பாஸ்கரிடம் கேட்டு சொல்கிறேன் என்கிறார்.

பாஸ்கர் வீட்டுக்கு சென்று கேட்டால் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவரை சென்று கேளுங்கள் என்கிறார். எங்களுக்காக இந்த ஊராட்சி தனி ஊராட்சியாக ஒதுக்கப்பட்டிருந்தும் எங்கள் ஊராட்சி மன்ற தலைவர் எங்களுக்காக எதுவுமே செய்ய மறுக்கிறார்.

இதனால் அடிப்படை வசதிகள் இன்றி நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகனா ராமச்சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு எங்கள் ஊராட்சியில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறிய தனியார் சொகுசு பேருந்து

மாதத் தவனை செலுத்தாதல் நிதி நிறுவன ஊழியர் பூட்டு போட்ட சம்பவம்