விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கட்டாயத்தேவன் பட்டி பகுதியில் சுடுகாடு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை.
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்டது கட்டாயத்தேவன் பட்டி பகுதியில் சுமார் 300 மேற்பட்ட குடும்பங்கள் உள்ள இந்த பகுதியில் சுடுகாடு அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சுடுகாடு அமைக்கப்பட உள்ள இடம் தற்போது பேருந்து நிறுத்தமாக செயல்பட்டு வருவதாகவும் இந்த இந்த நிழல் கூடை அமைந்துள்ள இடத்தில் மாணவ மாணவிகள் பெண்கள் முதியவர்கள் என ஏராளமானோர் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருவதாகவும் மேலும் அருகில் கோவில் பகுதிகள் மற்றும் அர்ஜுனா நதி கரையோர பகுதிகள் உள்ளதாகவும் சுடுகாடு அமைத்தால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவும் இவை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகம் முன் முத்திரை போராட்டத்தில் ஈடுபட்டனர் .அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் கலைந்து சென்றனர்.