பாபநாசம் அருகே தெருவிளக்கு வசதி இல்லாமல் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருட்டு சாலையில் பயத்துடன் வாழும் கிராம மக்களின் ஓர் செய்தி தொகுப்பு.
தமிழக அரசு கிராம சாலையில் சோலார் மின்விளக்கு அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா களஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட விழுதியூர் ,குருவாலபபாடி,கருப்பூர் கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக சாலையில் தெரு விளக்கு வசதி இல்லாமல் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் உடல்நிலை சரியில்லாமல் போனால் மருத்துவம் பார்ப்பதற்கும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கும் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதற்கும்,அன்றாட வேலைக்கு செல்பவர்கள் கூட இந்த இருண்ட சாலையை தான் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும் அச்சாலையில் பாம்புகள் , அபாயகர விலங்குகள் செல்லக்கூடியதாகவும் , இரவு நேரங்களில் செயின் பறிப்பு பாலியல் வன்கொடுமை நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் பயத்தில் இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர் மேலும் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சோலார் மின் விளக்கை ஏற்படுத்தி தர மறுக்கிறார்கள் என குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் தங்கள் கிராம மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக போர்கால அடிப்படையில் சோலார் விளக்கு அமைப்பதற்கு தமிழக அரசும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கிராம மக்களின் 100வருட கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்