சிலுவைபுரம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் மூன்று கிராமத்தில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டம்.
நாடு முழுவதும் 76 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராமம் இருந்து வருகிறது.. இந்த கிராமமானது பல ஆண்டுகளாக மூன்று ஊராட்சிகளில் பிரிந்து கிடக்கிறது. இந்த கிராமத்திற்கு 3 கிராம நிர்வாக அலுவலர்கள், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், மூன்று ஊராட்சி மன்ற தலைவர்கள் என பிரிந்து உள்ளது. கிராமத்திற்கு வாக்கு சாவடி என்றால் நான்கைந்து கிலோமீட்டர் தூரம் சென்று வாக்களிக்க வேண்டிய நிலையிலும் உள்ளது.
இந்நிலையில் இந்த கிராமத்தை தனி ஊராட்சியாக மாற்ற வேண்டுமென கிராம மக்கள் தொடர்ந்து மனு கொடுத்து போராடி வருகின்றனர். உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில்குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமத்தில் தங்களது கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும் மூன்று கிராமத்தில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட விட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
குடியரசு தினத்தன்று சிலுவை புறம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.