பாமாயில் தொழிற்சாலையால் விவசாயம் கேள்விக்குறி கிராம மக்கள் போராட்டம்
திருவாரூர் அருகே செயல்பட்டு வரும் பாமாயில் தொழிற்சாலையால் நிலத்தடி நீர் வீணாகி விவசாயம் கேள்விக்குறியாவதாக குற்றம் சாட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே கருப்பூர் கிராமத்தில் திருவாரூர் ஆயில் அன்ட் பேட்ஸ் எனும் தனியார் பாமாயில் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து தினம் தோறும் வெளியேறும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக பூமிக்கு அடியில் செலுத்தப்படுவதாக இப்பகுதி மக்கள் மற்றும் சாட்டியுள்ளனர்.
இதனால் முற்றிலுமாக நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு நீரில் எண்ணெய் கழிவுகள் கலந்திருப்பதால் விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து கேள்வி எழுப்பினால் தொழிற்சாலை நிர்வாகம் பதில் அளிப்பதில்லை எனவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இன்றைய தினம் இப்பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து தொழிற்சாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக இந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு கழிவு நீர் வெளியேற்றப்படுவதை கட்டுப்படுத்த வேண்டிய பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.