சிதம்பரம் அருகே 20 ஆண்டுகளுக்குப் பிறகு விடப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனருக்கு சால்வை அணிவித்து இனிப்பு கொடுத்து அரசு பேருந்தை வரவேற்ற கிராம மக்கள்.
சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு பேருந்து இயக்கப்படாததால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் கூலி தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்த நிலையில் கிராம மக்கள் சார்பில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர், அதன் அடிப்படையில் இன்று அந்த கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது இதனை அடுத்து ஒன்று சேர்ந்த கிராம மக்கள் ஓட்டுநர் நடத்தினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர் பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு அரசு பேருந்து வருகையை ஒட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்,
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் 20 ஆண்டு காலமாக அரசு பேருந்து இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்ததாகவும் தற்போது அமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைத்ததின் பெயரில் தற்போது அரசு பேருந்து வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.