நாமக்கல் பஞ்சமுக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா – லட்சார்சனையுடன் துவக்கம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி வி|ழா செவ்வாய்கிழமை காலை தொடங்கியது. விழாவை முன்னிட்டு இன்று ஹேரம்ப மகா கணபதிக்கு யாக பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும், மாலை 108 விக்னேஸ்வர பூஜையும் காலை மற்றும் மாலை லட்சார்சனை பெருவிழா இன்று மிக விமர்சையாகநடைபெற்றது..அப்போது பஞ்சமுக விநாயகப் பெருமானுக்கு பஞ்ச தீபம் உட்பட மகா தீபம் காண்பிக்கப்பட்டது.
விழாவின் இரண்டாம் நாள் இன்று(புதன்கிழமை) காலை மகா கணபதி யாகமும், அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரமும், மாலை லட்சார்ச்சனை மற்றும் தவில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியில் நடைபெறுகிறது. 3-ம்நாள் (வியாழக்கிழமை) காலை நேரம் மகா கணபதி யாகமும், 108 வலம்புரி சங்கு மற்றும் 1008 சங்காபிஷேகமும், பிற்பகல் 12 மணிக்கு மேல் மகா ஆராதனையும், மாலை விசேஷ பூஜையும், பிரசாதம் வழங்குதலும் சிறப்பு அலங்கார ஆராதனையும் நடைபெறுகிறது.
விழாவின் 4-ம் நாள்முன்னிட்டு (வெள்ளிக்கிழமை) காலை ஹேரம்ப மகா கணபதி யாகமும், பால்குட அபிஷேகமும், திருமஞ்சன அபிஷேகமும், சிறப்பு அலங்கார ஆராதனையும், பிற்பகல் மற்றும் இரவு விஷேச பூஜையும், சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு. மற ஹா கணபதியாகம், சிறப்பு அலங்காரம், தனபூஜை, சுமங்கலி பூஜை, தீப பூஜை, மஹா ஆராதனை நடைபெருகின்றனபக்தர்களுக்கு பிரசாதமும் வழங்குதலும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.