in ,

விருதுநகர் சின்ன பேராலி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறக்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

விருதுநகர் அருகே சின்ன பேராலி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறக்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய பேராலி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன பேராலி கிராமத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 27 லட்சத்தி 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பதற்காக விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் அவர்கள் வந்திருந்தார்.

அப்பொழுது அங்கு இருந்த பொதுமக்கள் அதிமுக மாவட்ட கவுன்சிலரும், மச்சராஜா தலைமையில் தங்கள் பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மாநில அரசு நிதியில் இருந்தோ தற்போது வரை சாலை அமைத்து தரவில்லை எந்த ஒரு பணியும் செய்யவில்லை ஆனால் மத்திய அரசு அளித்த நிதியின் மூலம் செய்யப்பட்ட பணிகளை மட்டுமே திறந்து வைக்க திமுக சட்டமன்ற உறுப்பினர் வருவதாக கூறி திமுக சட்டமன்ற உறுப்பினர் எ ஆர் ஆர் சீனிவாசன் அவர்களிடம் கேள்வி எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்திலும் இடப்பட்டனர்.

பொதுமக்களின் கேள்விக்கு முறையாக பதில் அளிக்காமல் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் காரில் ஏறி புறப்பட்டார் இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

What do you think?

அருப்புக்கோட்டையில் வருமான வரி துறை சார்பில் முன்கூட்டியே வரி செலுத்துவதன் முக்கியத்துவம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெம்பக்கோட்டை அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட முழுமையான சங்கு வளையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது