in

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதிகள் யானைகள் நடமாட்டம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதிகள் யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது செண்பகத் தோப்பு வனப்பகுதி. அடர்ந்த வனப் பகுதியாக காணப்படும் இங்கு பல்வேறு வகையான மான் மிளா ,யானை, கரடி உள்ளிட்ட விலங்குகள் காணப்படும் இந்த பகுதி மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இங்கு உள்ள மின்வெட்டிப்பாறை மற்றும் ராக்காச்சி அம்மன் ஓடை உள்ளிட்ட நீர்வரத்து பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை என்பது அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் அடிவாரப் பகுதியில் உள்ள விவசாயப் பகுதிகளுக்கு யானைகள் வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என வனதுறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

What do you think?

சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங் கேட் மூடல்

ஸ்ரீவில்லிபுத்தூர் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில் மண்டல அபிஷேகம்