in ,

விருதுநகர் ராம்கோ சிமெண்ட் ஆலை கொள்ளை- கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

விருதுநகர் ராம்கோ சிமெண்ட் ஆலை கொள்ளை- கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து 90 பவுன் நகைகள் திருட்டுப்போன சம்பவத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேர் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் தனியார் சிமெண்ட் ஆலையில் துணைப் பொது மேலாளராக (நிர்வாகம்) பணியாற்றி வருபவர் பாலமுருகன் (41).

திருநெல்வேலியில் உள்ள தனது தந்தையைப் பார்ப்பதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன் சென்றார். இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதேபோன்று, அருகே வசித்து வரும் ஆலை துணைப் பொதுமேலாளர் (தொழில்நுட்பம்) ராமச்சந்திரன் வீட்டு பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது.

இவ்விரு வீடுகளிலும் சுமார் 100 பவுன் நகைகள் திருட்டுப்போனதாக கூறப்பட்டது. ஆனால், பாலமுருகன் வீட்டில் மட்டும் 90 பவுன் திருட்டுபோனதும், ராமச்சந்திரன் வீட்டில் நகைகள், பொருள்கள் ஏதும் திருடுபோகவில்லை என்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இந்த திருட்டு சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டுள்ளதும், அவர்கள் மத்திய பிரசேதத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் என்பதம் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதில், சஞ்சய் என்பவர் போலீஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே அரியலூரில் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ள சஞ்சய் உள்ளிட்ட 4 பேரையும் வச்சக்காரப்பட்டி போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராம்கோ சிமெண்ட் ஆலையில் இரு துணை மேலாளர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை

90 பவுன் நகை, 50ஆயிரம் ரூபாய் பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இச் சம்பவத்தில் 4 பேர் கொண்ட கும்பல் ஆலை வளாகத்திற்குள் முகமூடி அணிந்தபடி கையில் ஆயுதங்களுடன் கொள்ளை அடிக்கச் சொல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

எஸ்பி பேரோஸ்கான் அப்துல்லா தலைமையில் 3 தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

What do you think?

இராஜபாளையத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம் மீட்கப்பட்டது…

மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து உருளைக் கிழங்கு லாரியில் 200 கிலோ புகையிலை கடத்தி வந்த 2 பேர் விருதுநகர் அருகே கைது….