in ,

கடலூர் ஸ்ரீ பெருந்தேவி நாயக சமேத வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் விஷ்ணுபதி புன்ய கால நிகழ்ச்சி

கடலூர் ஸ்ரீ பெருந்தேவி நாயக சமேத வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கார்த்திகை மாதம் முதல் நாளில் விஷ்ணுபதி புன்ய கால நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி நாயகமே சமேத வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்று கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு 27 நட்சத்திரங்களை ஒரே நாளில் வணங்கும் நிகழ்வு நடைபெற்றது

இதையொட்டி விஷ்ணு கோவிலான திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் கொட்டும் மழையிலும் கோவில் வளாகத்தில் 27 நட்சத்திரங்களை வணங்க இன்று எம்பெருமான் மற்றும் தாயார் சன்னதிகளை 27 முறை கோவில் வெளி பிரகாரத்தில் முழுவதும் பக்தர்கள் வலம் வந்தனர் கொடிமரத்தில் ஒவ்வொரு சுற்றும் பூக்களை வைத்து வணங்கி வரதராஜ பெருமாளை வழிபாடு செய்தனர் கோவிலில் வலம் வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் தேவனாத பட்டாச்சாரியார் அவர்கள் சடாரி தலையில் வைத்து துளசி பிரசாதமும் தீர்த்தமும் வழங்கப்பட்டது 27 நட்சத்திரங்களையும் ஒரே நாளில் வழிபாடு செய்யும் பொருட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் மற்றும் தாயாரை வணங்கி வந்தால் 27
நட்சத்திரங்களையும் வணங்கியதற்கு சமம் என்றும் ஐதீகம் என்று கூறப்படுகிறது

What do you think?

சிதம்பரம் அருகே 20 ஆண்டுகளுக்குப் பிறகு விடப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனருக்கு சால்வை அணிவித்து இனிப்பு கொடுத்து அரசு பேருந்தை வரவேற்ற கிராம மக்கள்

செஞ்சி அடுத்த வடகால் – சின்னபொன்னம் பூண்டி சாலை பழுதடைந்துள்ளது