தட்சிணாயன புண்ணிய காலம் மற்றும் ஆடி மாத பிறப்பை ஒட்டி நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் கோ பூஜை உடன் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தேவர்களின் இரவு பொழுதாக கருதப்படும் தட்சணாயன புண்ணிய காலம் இன்று தொடங்குகிறது. இதேபோல ஆடி மாத பிறப்பும் இன்று தொடங்கும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான வைணவஸ் தலங்களில் ஒன்றான அருள்மிகு இராஜகோபால சுவாமி கோவில் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது.
இங்கு மூலவா் வேதவல்லி குமுதவல்லி சமேத வேதநாராயணா் அமா்ந்த திருக்கோலத்திலும் மூல விமானத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத அழகிய மன்னாா் நின்ற திருக்கோலத்திலும், உற்சவா் ருக்மணி சத்யபாமா சமேத இராஜகோபாலர் என 3 திருக்கோலங்களில் அருள்பாலித்து வருகின்றனா்.
இத் திருக்கோயிலில் ஆண்டுமுழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது.
ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும். ஆடி மாதத்தைக் கணக் கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வங்களுக்குமு் கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.
ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது. அனேக சிறப்புகள் வாய்ந்த ஆடி மாதப் பிறப்பான இத் திருக்கோயிலில் இன்று ஆடி மாத பிறப்பு கோ பூஜை மற்றும் சிறப்பு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
இதனை ஒட்டி காலை கோவில் நடை திறக்கப்பட்டு ராஜகோபாலசுவாமி விஸ்வரூப தரிசனமும் மூலவா் வேதநாராயணருக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பொிய திருவடியான கருடன் சன்னதி முன்பு பசுவுக்கு பூஜைகள் நடைபெற்றது. பசு மற்றும் கன்றுக்கு புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டது.
லெஷ்மி அஷ்டோத்திரம் கொண்டு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அா்ச்சனை செய்யப்பட்டு ஸ்ரீசுக்தம் சொல்லப்பட்டது. கோமாதாவிற்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
பக்தா்கள் பசுவிற்கு பழம் அகத்தி்ககீரை போன்றவைகளை கொடுத்து கோமாதாவை வலம் வந்து வணங்கினா்.
தொடா்நது ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலருக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுமார் தரிசனம் செய்தனர்.