பொதுமக்கள் ஆபத்தை உணராமல் கடற்கரைக்கு வருகை
புதுச்சேரி கடல் நான்காவது நாளாக சீற்றத்துடன் அதிக கொந்தளிப்புடன் காணப்படுகிறது… சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் கடற்கரைக்கு வருகை தந்து கடல் அழகை ரசித்து வருகின்றனர். இவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தும் முயற்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் Fengal புயலாக வலு பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வட தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரையை வரும் 30 ஆம் தேதி சனிக்கிழமை காலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடக்கும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…
இதன் காரணமாக புதுச்சேரி கடற் பகுதியில் கடந்த நான்கு நாட்களாகவே கடல் சீற்றத்துடன் மிகுந்த பந்தளிப்புடன் காணப்படுகிறது… இதன் காரணமாக புதுச்சேரி கடற்கரை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் வரவேண்டாம் என்று முதலமைச்சர் நேற்று பார்வையிட்ட பிறகு காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்பிறகு காவல்துறை தொடர்ந்து பொதுமக்கள் கடற்கரைக்கு வர வேண்டாம் என அறிவித்து வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து காலை முதல் கடற்கரை பகுதிக்கு வருகின்றனர். கடல் அலை சீற்றத்தை கண்டு செல்பி எடுத்து குடும்பத்தினருடன் மகிழ்ந்து வருகின்றனர்….