விவேக் மகள் திருமணம் எளிமையாக நடந்தது
நடிகர் விவேக் மகள் தேஜஸ்வினிக்கும் சிரஞ்சீவி பரத் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
மறைந்த நடிகர் விவேக்கின் மூத்த மகளுக்கு எளிய முறையில் திருமணம் முடிந்தது. நகைச்சுவையால் பலரை சிரிக்க வைத்து கொண்டாடிய நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக 2021-ல் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது மூத்த மகளான தேஜஸ்விக்கு, சிரஞ்சீவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விவேக் இல்லத்தில் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நடந்த இந்தத் திருமணத்தில், தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மறைந்த நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். அவர் ஒரு சிறந்த மனிதாபிமானம் கொண்ட அவர் ஏப்ரல் 2021-ல் மாரடைப்பால் உயிர் இழந்தார். சென்னையில் உள்ள அவரது இல்லம் அருகே, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.