in

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் கடலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் கடலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்ய வருகின்ற நவம்பர் 16,17, 23,24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றது. இதில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்தல், புதுப்பித்தல், திருத்தம் ஆகிய பணிகளை செய்யலாம்.

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி ஆணையாளர் அணு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

கடலூர் நகர அரங்கில் தொடங்கிய இந்த பேரணி முக்கியசாலைகளின் வழியாக அரசு தொழிற்பயிற்சி மையத்தில் நிறைவு பெற்றது. வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக சென்றனர்.

What do you think?

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களை அகற்றாமல், அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாக கூறி மற்றொரு பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்பின் புதிய வடக்கயிறு ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு இணைக்கும் பணி துவங்கியது.