நெல் களம் இல்லாததால் ரோட்டில் காத்திருக்கும் நிலை
விருதுநகர் மாவட்டம் ராஜபளையத்தில் நெல் களம் அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை களம் இல்லாததால் ரோட்டில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் புகார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கொண்டனேரி கருங்குளம் கடம்பன்குளம் கண்மாய் பகுதியில் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது இங்கு விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகின்றனர். தைப்பொங்கல் முடிந்தவுடன் அறுவடை தொடங்கப்பட்ட நிலையில் அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுக்க தொடங்கினர்.
இந்நிலையில் நெல் அடிப்பதற்கும் உலர்த்துவதற்கும் போதிய இடவசதி இன்றி விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வேறு வழியின்றி தென்காசி தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் எந்திரங்கள் மூலம் நெல் பிரித்து காய வைத்து வருகின்றனர்.
25 ஆண்டுகளுக்கு முன்பு வரை நெல் உலர்த்தும் களத்தில் கதிர்களை அடித்து காய வைத்த விவசாயிகள் பயனடைந்து வந்த நிலையில் தற்போது கலங்கள் அரசு கட்டிடங்களாக மாறிப் போனதால் விவசாயிகள் வேறு வழியின்றி சாலையோரம் காய வைக்கும் நிலை உருவாகியுள்ளது.
மாரியம்மன் கோவில் எதிரியே உள்ள இடத்தில் நெல்லை பிரிக்கும் இயந்திரத்தை ஒரு வாரமாக வைத்துவிட்டு வேளாண்மை துறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்
இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகளுக்கு விவசாயிகள் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக விவசாயிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.