விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்..
பாமக தொடரப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்..புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரானார்..
திமுக கூட்டணியில் விரிசல் விழாதா..? என ஏங்கிக் கிடப்பவர்கள் வதந்தி பரப்புகின்றனர்.. விசிக அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி கட்டுக்கோப்போடு உள்ளது. திருமாவளவன்…
புதுச்சேரியில் 2014ம் ஜனவரியில் நடைபெற்ற விசிக ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் உரையாற்றினார்.அப்போது அவர், தலித் அல்லாத பிற சமூகத்துக்கு எதிராக பேசியதாகவும் பகையை துண்டு வகையில் பேசியதாகவும் அவர் மீது உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் பாமக சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் பத்து வருட காலமாக ஆஜராகாத காரணத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன்பு தொல் திருமாவளவன் ஆஜரானார். நீதிமன்றத்தில் எந்த அரசியல் தலைவர்கள் ஆஜரானாலும் கட்சி கொடி இல்லாமல் வரவேண்டும். ஆனால் திருமா கார் கட்சி கொடியுடன் வந்தது.புதுச்சேரி நீதிமன்றத்தில் நண்பகல் 12 மணிக்கு ஆஜரான திருமாவளவன் குற்றப்பத்திரிகையை பெற்று கொண்டார்.இதனை தொடர்ந்து திருமாவளவன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து 12.30 மணிக்கு அவர் வெளியே வந்தார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், 2014ம் ஜனவரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய போது, தலித் அல்லாத பிற சமூகத்துக்கு எதிராக பேசியதாகவும் பகையை துண்டு வகையில் பேசியதாகவும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் தலைமறைவானவர் என்ற அறிவிப்போடு நீதிமன்றத்தில் ஆஜராகும் கூறினார்கள்.. அதனால் ஆஜராகி வழக்கை விரைந்து நடத்துமாறு கூறியுள்ளேன்.இது பொய் வழக்கு.. தள்ளுபடி செய்ய வேண்டும் என விண்ணப்பம் செய்து இருக்கிறோம்..இந்தப் பொய் வழக்கில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.
திமுக கூட்டணியில் விரிசல் விழாதா..? என ஏங்கிக் கிடப்பவர்கள் வதந்தி பரப்புகின்றனர்.. விசிக அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி கட்டுக்கோப்போடு உள்ளது.. உரிமை தொடர்பாக எழுப்பும் குரல் வேறு.. கூட்டணி தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாடு என்பது வேறு.. இந்த வதந்தி எங்கள் கூட்டணி பாதிக்காது என திருமா தெரிவித்தார்.
விளையாட்டுத் துறையை சார்பில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்வுகளில் கார் பந்தயமும் ஒன்று. இது போன்ற போட்டிகள் நடத்துவது மூலம் தலைநகர் சென்னையில் சுற்றுலா கவர்ந்து இழுக்க கூடிய வாய்ப்பாக இருக்கும்.. தொழில் முதலீட்டாளர்களை சென்னை நோக்கி அழைக்க ஏதுவாக அமையும்.. பெங்களூர், புதுடெல்லி போன்ற நிகழ்வுகளில் நடத்துவதன் மூலம் தான் அந்த நகரங்களில் தொழில் முதலீடுகள் பெறுகின்றன. அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஏற்படுத்துள்ள நிகழ்ச்சியின் காரணமாக நீதிமன்றமும் போட்டியை நடத்த தீர்ப்பளித்துள்ளது என்று நம்புகிறேன் எனவும் திருமா கூறினார்.
புதுச்சேரிக்கு மாநில அரசே வரவேற்கிறோம்.. நாங்கள் அதை வலியுறுத்துவோம் எனவும் திருமா தெரிவித்தார்.
இயக்குனர் மாரி. செல்வராஜ் பாராட்டும் நீங்கள் இயக்குனர் ப. ரஞ்சிதை ஏன் பாராட்டவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன். வாழை திரைப்படம் பார்த்து படம் நன்றாக இருப்பதாக இயக்குனர் மாரி. செல்வராஜை பாராட்டினீர்கள். ஆனால் தங்கலான் படத்தை இயக்கிய பா.ரஞ்சித்தை பாராட்டவில்லையே.
என்ற கேள்விக்கு அந்த படத்தை பார்க்கவில்லை..பார்த்த பிறகு தான் பாராட்ட முடியும் திருமாவளவன் தெரிவித்தார்.