in

சம்பா சாகுபடிக்காக தஞ்சை கல்லணையிலிருந்து வினாடிக்கு 3400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

சம்பா சாகுபடிக்காக தஞ்சை கல்லணையிலிருந்து வினாடிக்கு 3400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

 

காவிரி டெல்டா மாவட்டங்கள் சம்பா சாகுபடிக்காக தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து வினாடிக்கு 3400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ், டிஆர்பி ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள் மதகுகளின் பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்து விதை நெல்லை காவிரி ஆற்றில் தூவி வழிபட்டனர்.

காவிரியில் வினாடிக்கு 1500 கன அடி வெண்ணாற்றில் வினாடிக்கு 1000 கன அடி கல்லணை கால்வாய் வினாடிக்கு 500 கன அடி கொள்ளிடத்தில் வினாடிக்கு 400 கன அடி வீதம் மொத்தம் 3400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணையில் இருந்து இன்று காலை 9.15 கங்கு தண்ணீர் திறப்பு

தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், அதன் உபரி நீர் கர்நாடக அணையிலிருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையின் முழு கொள்ளவை எட்டியுள்ளது.

இதற்கிடையில் அணையில் பாதுகாப்பை கருதியும், டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காவும், ஆடிபெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடவும் கடந்த 28 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை அமைச்சர் கே.என்.நேரு திறந்து விட்டார்.

இந்த தண்ணீர் நேற்று இரவு கல்லணைக்கு வந்தது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் பாசனத்தை மேற்கொள்ள ஏதுவாக காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் இன்று காலை திறந்துவிடப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்கள், மக்கள் பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் அரசு அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை நீர்வள ஆதாரத்துறையினர் செய்து வருகின்றனர்.

What do you think?

அய்யம்பேட்டை அருகே இரண்டு தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து..

நாகையில் 100க்கு மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை அதிரடியாக துண்டித்தனர்