ரெய்டுக்கும் கைதுக்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை.2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான வெல்லப் போகும் வெற்றிக் கூட்டணி அதிமுக தலைமையில் அமையும் சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் ன் 88 ஆவது நினைவு நாளில் நெல்லையில் உள்ள மணிமண்டபத்தின் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி
சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 88 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது குருபூஜை நாளில் தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெள்ளாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகளோடு திருநெல்வேலியில் உள்ள வ உ சி யின் நினைவு மண்டபத்தின் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்
இந்திய துணை கண்டம் பிரிட்டிஷாரின் ஏகாதிபத்தியத்தில் அடிமைப்பட்டு கடந்த போது சுதந்திர வேட்கையை இந்திய மக்களிடம் ஏற்படுத்தியவர் வ .உ சிதம்பரனார் . மறைந்த தலைவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு நிகரான தலைவர்கள் வேறு யாரும் இல்லை என்றார்.
மேலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை எனவும் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தலைமை கழகம் செய்தி வெளியிட்டு இருப்பது குறித்த கேள்விக்கு
வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அருமையான கூட்டணி வலுவான கூட்டணி வெல்லப்போகும் கூட்டணி வெற்றி கூட்டணி அமையும்.கூட்டணி எது என்பதற்கான முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுத்து சரியாக காய் நகர்த்தி கொண்டு சென்று இருக்கிறார்.
அடுத்து ஒரு ரெய்டு நடந்தால் அதிமுகவை பாஜக வோடு இணைத்து விடுவார்கள் என உதயநிதி கூறி வருவது குறித்த கேள்விக்கு ரெய்டுக்கும் கைதுக்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை.போராளிகளை பார்த்து படித்து போராளிகளுடன் இயக்கம் நடத்துபவர்கள் நாங்கள்.2026 தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக வந்த பிறகு தற்போதைய ஆட்சியால் கஷ்டப்படும் மக்களுக்கு சுபிக்ஷம் தரும் வழியை அவர் எடுப்பார் மக்கள் சிரமப்படாத வகையில் அனைத்து உதவிகளும் அதிமுக ஆட்சியில் செய்யப்படும்.
பாஜக வுக்கு எதிராக நின்று சமூக வலை தளங்களில் மீம்ஸ் வெளியிட வேண்டுமென ஜெயக்குமார் கூறியதாக வந்த தகவல் குறித்த கேள்விக்கு
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடம் இருந்து உத்தரவுகள் வந்தால் அதனை திறம்பட செய்து முடிப்போம் எந்த முடிவாக இருந்தாலும் அவர் எடுப்பார். தற்போதைய ஆட்சியில் மின்சார துண்டிப்பு மருத்துவர் மீது தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அதிருப்திகள் மக்கள் மத்தியில் உள்ளது தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது அதனை தடுக்க காவல்துறை திணறி வருகிறது காவல்துறையை சுதந்திரமாக செயல்பட தற்போதைய ஆட்சி அனுமதிக்கவில்லை காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டால் மட்டுமே குற்ற செயல்களை தடுக்க முடியும் அதிமுக ஆட்சியில் காவல்துறை ஸ்காட்லாந்து நாட்டின் காவல் துறையினருக்கு இணையாக செயல்பட்டனர்.வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அருமையான அற்புதமான ஆட்சி அனைவரும் மதிக்கக்கூடிய சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கக்கூடிய ஆட்சி ஏற்படுத்தப்படும். என்று தெரிவித்தார். பேட்டியின் போது அதிமுகவின் கொள்ளக பரப்பு துணைச் செயலாளர் சரவணபெருமாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்