நாம் தமிழர் வேட்பாளருக்கு தைரியம் கொடுத்த மீனவ வாக்காளர்
நாகை அடுத்த செருதூர் மீனவ கிராமத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செருதூர் மீன் மார்க்கெட்டி மீனவ பெண்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் போது நாங்கல்லாம் இருக்கும்போது நீங்கள் கலங்கக்கூடாது எங்களுடைய ஓட்டு எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு தா என வாக்காளர் தெரிவித்த போது மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் அக்கா உங்களுடைய வார்த்தை எனக்கு எனர்ஜியாக உள்ளது தெரிவித்தார்.
பயப்படாதீர்கள் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் நாங்கள் இருக்கிறோம். தொடர்ந்து மீனவப் பெண்களுடன் சேர்ந்து மீன்களை விற்பனை செய்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார் வேட்பாளர் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர் தேர்தல் நேரத்தில் மட்டும் மாற்றுத்திறனாளிகளை வேட்பாளர்கள் வீடு தேடி வந்து ஓட்டு போட சொல்றாங்க முடிந்ததும் எங்களைக் கண்டு கொள்ளவில்லை என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
மேலும் அப்பகுதி மக்களிடம் மீன்பிடித் தொழிலில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கேட்டு அறிந்த அவர் 50 ஆண்டுகால கச்சத்தீவு பிரச்சனைக்கு தான் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றால் முதல் குரலாக பதிவு செய்வேன் என்றும் நாகை நாடாளுமன்ற தொகுதிக்கான மீனவர் பிரச்சினை விவசாயிகள் பிரச்சினை உப்பள தொழிலாளர்கள் பிரச்சினை சிபிசிஎல் பிரச்சனை நாகை துறைமுக வளர்ச்சி மற்றும் மீன்பிடித் தொழிலில் உள்ள பிரச்சனைகளை களைவது தொடர்பாக தொகுதி சார்ந்த பிரச்சினைகளுடன் தமிழகத்தின் உரிமை மற்றும் நலனுக்கான ஒட்டுமொத்த குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என கூறி வாக்கு சேகரித்தார்.