ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் மக்களுக்கு என்ன பயன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து வருட முடியாத அரசின் நிலை என்ன தஞ்சையில் திமுக எம்பி கனிமொழி கேள்வி.
தஞ்சையில் கலைஞர் 100 வினாடி வினா போட்டியில் திமுக எம்.பி மற்றும் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கலந்து கொண்டார் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் அவர் தெரிவித்ததாவது துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு உயர்ப்பதவி அளித்தது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு என்ன என்று விசாரித்து அப்படி ஒரு தவறு நடந்திருந்தால் அதற்கு சரியான தீர்வு காண்போம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கு அமைச்சரவையில் தான் ஒப்புதல் அளித்துள்ளது. நாடு ஒப்புதல் அளிக்கவில்லை இதில் முதல்வரின் நிலைப்பாடு என்ன என்பது உங்களுக்கு தெரியும் நிச்சயம் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்தையும் ஒரே நாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என நினைத்தால் மாநில உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வருடம் முடியாத அரசின் நிலை என்ன ஒரே தேர்தலால் மக்களுக்கு வரும் பயன் என்ன என எதுவுமே இல்லாமல் அவர்களுக்கு எதை லாபம் தரக்கூடிய என்று அதை செய்கிறார்கள். அவர்களுடைய கருத்துக்களை தொடர்ந்து மக்கள் மீது திணிக்க வேண்டும் என்று தான் எண்ணுகிறார்கள் ஜனநாயகத்திற்கும் மாநிலங்களுடைய உரிமைகளுக்கும் எதிராக இருக்கக்கூடிய எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது பின்பு குடும்ப ஆட்சி தான் திமுகவில் இருந்து வருகிறது உதயநிதி அடுத்து இன்ப நிதி என பிற கட்சிகள் தெரிவித்து வருகிறார்கள் என கேட்ட கேள்விக்கு அங்கிருந்து பதில் சொல்லாமல் நழுவி அங்கிருந்து சென்றார்