in

எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை தஞ்சையில் வைத்திலிங்கம் பேட்டி

எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை தஞ்சையில் வைத்திலிங்கம் பேட்டி

 

எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. டிசம்பரில் அனைவரும் ஒற்றுமை ஆவார்கள். 2026 அதிமுக ஆட்சி தான் என்று தஞ்சையில் வைத்திலிங்கம் பேட்டி.

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் இருக்கின்ற அதிமுக தொண்டர்கள் 100 சதவீதத்திலல் 99.9 தொண்டர்கள் அதிமுக இணைய வேண்டும் , 2026 புரட்சி தலைவர் – தலைவி ஆட்சி கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறார்கள். அந்த எண்ணத்தை நிச்சயமாக அம்மா, புரட்சி தலைவர் ஆத்மா நிறைவேற்றும் என நம்புகிறோம்.

எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள் – விரும்பாதவர்கள் அவர்களே இயக்கத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள் இது காலத்தின் கட்டாயம் என்றார்.

ஒற்றை தலைமை – இரட்டை தலைமை என்பது இணையும் போது ஒரு முடிவுக்கு வரும். 2025 டிசம்பருக்குள் நல்ல முடிவு ஏற்படும்.

எடப்பாடி பழனிச்சாமி 20% சதவீதம் ஒட்டு வரும் அளவிற்கு இந்த இயக்கத்தை மோசமான நிலைக்கு கொண்டு வந்துள்ளார். அதனால் அதிமுகவை அழித்து விடுவார் என்ற எண்ணத்தில் டிடிவி கூறியிருப்பார்.

சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், எடப்பாடி என அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தொண்டனின் எண்ணம்.

டிசம்பரில் அனைவரும் ஒற்றுமை ஆவார்கள். 2026 அதிமுக ஆட்சி தான் என்றார்.

What do you think?

தமன்னா…வுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்

ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம்