in

தமிழக அளவில் 47வது இடத்தில் முன்னேறி இருக்கிறோம், அமைச்சர் கோவி.செழியன் தகவல்

தமிழக அளவில் 47வது இடத்தில் முன்னேறி இருக்கிறோம், அமைச்சர் கோவி.செழியன் தகவல்

 

உயர்கல்வித்துறையில் அகில இந்திய அளவில் 28, தமிழக அளவில் 47வது இடத்தில் முன்னேறி இருக்கிறோம், அமைச்சர் கோவி.செழியன் தகவல்

தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்களை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்திலிருந்து சுமார் ஆயிரம் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அரிசி, மளிகை, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வாகனத்தில் அனுப்பி வைத்தார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், துவக்கப்பள்ளி காலத்தில் இருந்து இடை கற்றல் கல்வி இருக்கக் கூடாது என்பது பள்ளிக் கல்வித் துறையில் நாம் எடுத்துக்கொண்ட முயற்சி, அதைப்போல் உயர்கல்வி துறையிலும் செமஸ்டர் முறையில் நிறுத்தப்படுகிற மாணவர்களுக்கு மேற்கல்வி தொடர்வதற்கு வாய்ப்பாகவும், மறுதேர்வு முறை என்ற நிலையிலும் அறிவிக்கப்பட்டு தான் உயர்கல்வி அடைவதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறோம்.

உயர்கல்வியில் உச்சம் தொட்ட மாநிலம் தமிழ் மாநிலம் தான், தலைமுறை தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு திராவிட இயக்கத்தால் கிடைத்த பெருங்குடை இந்தியாவில் 47 சதவீதம் உயர் கல்வித் துறையில் முன்னேறி இருக்கிறோம், அகில இந்திய அளவில் 28, தமிழக அளவில் 47 அந்த அளவில் இடைகற்றல் இல்லாமலும் தொடர் கல்வியில் உயர்நிலை கல்வி தொடர வேண்டும் என்று எடுக்கப்பட்ட பெரும் முயற்சி, யுஜிசி என்று சொல்வதை விட தமிழக அரசின் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார், (பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் உயர்கல்விக்கு வரும்போது நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் எந்த பாடத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து படிக்கலாம் என்ற விதிகளை பல்கலைக்கழக மாநில குழு (யுஜிசி) நேற்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது) இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி பழநிமாணிக்கம், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

What do you think?

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா

நலத்திட்ட உதவிகளை உயர்கல்வி துறை அமைச்சர் கோ.வி.செழியன் வழங்கினார்