in

பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்க மாட்டோம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு

கொள்கையை விட்டுவிட்டு பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்க மாட்டோம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு. 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நத்தம் மற்றும் உலுப்பகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் பகுதிநேர நியாய விலை கடைகள் திறப்பு மற்றும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் உணவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது.

திமுகவும் பாஜகவும் ஒன்றாகத்தான் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது குறித்து உணவுத்துறை அமைச்சர் கூறும்போது…

பிரதமராக மோடி பதவி ஏற்கும் போது தமிழ்நாட்டின் முதல்வர் செல்லவில்லை. மாறாக தமிழ்நாட்டின் தேவைகளுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான போதிய நிதியை ஒதுக்க கோரியும் முதல்வர் பிரதமரை சந்தித்து பேசி உள்ளார்.

இந்த சந்திப்பால் திமுகவிற்கு பாஜகவிற்கு எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. மாநிலத்தில் சுயஆட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.

ஆளுநர் கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் இதற்கு முன்னர் அமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர் தற்போது கலந்து கொள்கின்றனர் என செய்தியாளர் கேட்டதற்கு…

ஆளுநர் கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் இதற்கு முன்னர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அவர்கள் கலந்து கொண்டார் தற்போது உயர்வு கல்வித் துறை அமைச்சராக உள்ள கோவை செழியன் அவர்களும் கலந்து கொண்டுள்ளார். இதை வைத்து திமுகவும் பாஜகவுக்கும் தொடர்பு இருக்கும் என்று முடிச்சு போட வேண்டாம் என்று உணவுத்துறை அமைச்சர் கூறினார்.

What do you think?

எங்களுக்கு ஃபேமிலி பேக்ரவுண்ட் கிடையாது பாய்ஸ் பட பாணியில் அசத்தி வரும் தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்கள்

வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் பலி