in

“பராசக்தி” டைட்டில்…லை மாற்ற வில்லை என்றால் போராட்டம் நடத்துவோம்


Watch – YouTube Click

“பராசக்தி” டைட்டில்…லை மாற்ற வில்லை என்றால் போராட்டம் நடத்துவோம்

 

சுதா கொங்கரா இயக்கிய SK25 சமீப காலமாக நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகிறது.

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடிக்கும் SK25 திரைப்படம் தலைப்பு குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்திற்கு நடிகர் சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி என்ற படத்தின் பெயரை வைப்பதாக அறிவிப்பு வெளியானது.

டைட்டில்…லை கேட்ட பல சிவாஜி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிவாஜி சமூக நல பேரவை தலைவர் கே சந்திரசேகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு யுக கலைஞனாக கலை உலகின் தவப்புதல்வனாக கலைஞர் கருணாநிதி அவர்களின் கதை வசனத்தில் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிபடித்தியவர் நடிகர் சிவாஜி கணேசன் ..

ஏற்கனவே பராசக்தி என்ற படத்தில் பெயரில் படம் எடுக்க முயன்ற போது எதிர்ப்பு கிளம்பியதால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது மீண்டும் அதே பெயரில் உருவாகும் இந்த படம் தமிழக திரை உலக வரலாற்றை சிதைக்க வேண்டும் என்ற போக்கிற்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

பராசக்தி என்ற பெயரை மாற்றவில்லை என்றால் ரசிகர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

உடல் உறுப்புகளை தானம் செய்த இசையமைப்பாளர் டி. இமான்

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி