வெப் சீரிஸ்…இக்கு வந்த மிரட்டல்
கவர்ச்சி நடிகை சோனா தனது சொந்த வாழ்க்கையை மையமாக வைத்து ஸ்மோக் என்ற பெயரில் வெப் சீரிஸ் எடுத்து இருக்கிறார்.
தானே இயக்கி நடித்தும் இருக்கிறார். அந்த சீரியஸ் பற்றி தற்போது அளித்துள்ள பேட்டியில் எனது சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மையமாக வைத்து இந்த தொடரை நான் எடுத்து இருக்கிறேன் ஆனால் இந்த தொடரை எடுக்கக் கூடாது என்று பலர் என்னை மிரட்டினார்கள்.
சுவர் ஏறி குதித்து என் வீட்டுக்குள் வந்தார்கள் பிரச்சினையை பார்த்து நான் பயந்து ஓடினேன். கொலை மிரட்டல் கூட எனக்கு விடுத்தார்கள் ஒரு கட்டத்தில் துணிந்து இறங்கி Webseries. ..யை எடுத்து முடித்தேன்.
இந்த தொடரை படமாக்கிய போது சிலர் என்னை ஏமாற்றி விட்டார்கள். சீரீஸ் 8 எபிசோடுகளாக எடுத்து உள்ளேன் நான் யாரையும் பழிவாங்க இந்த தொடர் எடுக்கவில்லை .
நான் தனி ஆளாக போராடி வாழ்க்கையில் மேலே வந்திருக்கிறேன். தற்பொழுதும் எனக்கு கவர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் வருகிறது. ஆனால் இனிமேல் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.