பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தாய் உள்ளத்தோடு மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் மு க ஸ்டாலின் – செஞ்சி மஸ்தான் பேச்சு.
மயிலம் அடுத்த வேம்பூண்டியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமாகிய பூங்கா. பாக்யராஜ் தலைமையில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செஞ்சி.மஸ்தான் கலந்துக் கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், காலையில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோர் நலன் கருதி ஆண்டை நாடுகளே பின் பற்றும் வகையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என்று பெருமிதம் Iதெரிவித்தார்.
மேலும் அவர் பேசும் பொழுது, ஓர் தாயினுடைய கடமையை தாய் உள்ளத்தோடு தமிழக முதல்வர்மு க ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மாசிலாமணி, மாநில தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி.சிவா, ஒன்றிய செயலாளர் மணிமாறன்,
நகர செயலாளர் கண்ணன்,, பொதுக்குழு உறுப்பினர் சின்னராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தக் குமார், பேரா. சிகாமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்
கொண்டனர்.