in

சித்தாமூர் ஒன்றியத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்


Watch – YouTube Click

சித்தாமூர் ஒன்றியத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கழகத்தின் நிறுவன தலைவரும், நடிகருமான விஜய்யின் 50 வது பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சூரிய நாராயணன் வழிகாட்டுதலின்படி இந்த நூல் ஊராட்சியின் கிளைக் கழக நிர்வாகிகள் ராகுல் அருள்ராஜ், அருண்ராஜ் ஏற்பாட்டில் இந்தலூர் ஊராட்சியின் பெரியார் நகரில் கிளையின் சார்பில் கழகக் கொடியேற்று விழா மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பூமி பூஜை விழா, இந்தளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா, 50 தென்னை மரக் கன்றுகள் வழங்கும் விழா மற்றும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மோகன்ராஜா, மாவட்ட பிரதிநிதி சாகுல் ,சித்தாமூர் ஒன்றிய தலைவர் துரை,ஒன்றிய துணைச் செயலாளர் வேலவன்,ஒன்றிய பொருளாளர் சத்யராஜ், சித்தாமூர் ஒன்றியம் மகளிர் அணி தலைவி நிஷாந்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

ஹெலிகாப்டர் விபத்து ஈரான் அதிபர் உயிரிழப்பு

காலை முதல் லேசான மழை புதுச்சேரியில் குளிர்ச்சியான சூழல்