in

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

 

திண்டிவனம் இறையானூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் எல். வெங்கடேசன் கட்சி கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்டம் மரக்காணம் மேற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் ஓமந்தூர், பெருமுக்கல் ,சிவிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் இறையனூர் கிராமத்தில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் எல். வெங்கடேசன் அலங்கரிக்கப்பட்ட விஜயகாந்த் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்பு அங்குள்ள கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் குடம், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் சிக்கன் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேசன், திண்டிவனம் நகர செயலாளர் காதர் பாட்ஷா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சியாமளா, அவைத் தலைவர் ஐயனார், பொருளாளர் அமல தாஸ், மற்றும் நிர்வாகிகள் சேட்டு, விஜயகுமார், முனுசாமி, செந்தில், ஏழுமலை, முருகன், வெங்கடேசன், ஜெயபால் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

What do you think?

தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

நடிகர் விஜய் சேதுபதி மரியாதை நிமித்தமாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்