என்ன.. அமலாபால் குழந்தைக்கு இப்படி பெயர் வெச்சிருக்கார்
முன்னனி நடிகையா இருக்கும் போதே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த அமலா பால் சென்ற வருடம் தொழிலதிபர் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்தவுடன் கன்சீவ் ஆகி இருப்பதாக Instaவில் Reels போட்டவரு.
அதன் பிறகு போட்டோஷூட் எடுப்பதே புல் டைம் job…ஆக்கி ஒவ்வொரு தருணத்தையும் நான் ஸ்டாப்பாக ஷூட் செய்து சமூக வலைத்தளத்தில் போஸ்ட் போட்டு வைரல் ஆக்கினார்.
ஒரு சிலர் வாழ்த்தினாலும் ஒரு சிலர் இந்த நேரத்திலும் இப்படியா என்று கழுவி கழுவி ஊற்றினர்.
இந்நிலையில் ஜூன் 11ம் தேதி அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அவர் மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் வீட்டிற்குள் நுழையும் போது அவர் கணவர் கொடுத்த சர்ப்ரைஸை பார்த்து மெர்சல்…ஆகி அந்த வீடியோவையும் இன்ஸ்டால் பகிர்ந்துள்ளார் .
தற்பொழுது அவரின் மகனுக்கு இலை (Ilai) என்று பெயர் வைத்துள்ளார்.
இன்ன இப்படி பெயர் வேச்சிருகிங்க ..ன்னு கேட்டவங்களுக்கு அதன் அர்த்தத்தை சொல்லிஇருக்கிறார். இலை என்ற பெயருக்கு ஹிப்ரு மொழியில் பரலோகம், விண்ணுலகம், சொர்க்கம் என்று அர்த்தமாம்.