கடந்த ஐந்து ஆண்டு புதுச்சேரிக்கு என்ன செய்தீர்கள்? காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பிரச்சாரத்தில் பெரும் பரபரப்பு
புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து உழவர் கரை தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவருக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து உழவர் கரை தொகுதி பிச்சைவீரன் பேட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திடம்…
கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்.பி.யாக இருந்த நீங்கள் இந்த மாநிலத்திற்கு என்ன செய்தீர்கள் என்று ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் கேள்விகளை எழுப்பினார்.
அப்போது நூற்றுக்கணக்கான மக்கள் பிரச்சாரத்தில் இருக்கும்போது ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவர் அந்த கேள்வி எழுப்பி வேட்பாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பிரச்சாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனை அடுத்து… காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகளால் அவர் அப்புறப்படுத்தப்பட்டார். இதனால் பிரச்சாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் அங்கிருந்து புறப்பட்டு உழவர்கரை தொகுதியை சேர்ந்த ரெட்டியார் பாளையம், அஜிஸ் நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
உழவர் கரை தொகுதி பிச்சைவீரன்பேட்டில் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் வேட்பாளரை, ஆளுங்கட்சித் தொண்டர் ஒருவர் வழிமறித்து கேள்வி மேல் கேள்வி கேட்ட சம்பவம் பிரச்சாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.