in

ராமுத்தேவன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்து நடந்தது என்ன விரிவான விளக்கம்


Watch – YouTube Click

ராமுத்தேவன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்து நடந்தது என்ன விரிவான விளக்கம்

 

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவத்தில் விதிமுறையை மீறி நடைபெற்றதாக மாவட்ட ஆட்சியர் பேட்டி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பகோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 10-பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மதுரை சரக டி.ஐ.ஜி ரம்யாபாரதி, சாத்தூர் எம்.எல்.ஏ ரகுராமன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கூறியதாவது:
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் விதியை மீறி அளவுக்கு அதிகமான ரசாயன மூலப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

மனிதத் தவறின் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் முழுமையான ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்து குறித்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவட்டம் முழுவதும் பட்டாசு ஆலை விதிமுறை மீறலை தடுக்க நான்கு குழுக்கள் கண்காணித்து வருகிறது எனவும் ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து 9 பேர் பலி 4 பேர் படு

ரூ 59. 57 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்ப கட்டிடம்